தெருநாய்கள் தொல்லை

Update: 2026-06-28 11:16 GMT

அரியலூர் வட்டம் பூக்கடைத்தெரு பகுதியில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் கூட்டமாகச் சுற்றித் திரிவதோடு சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களைக் கடிக்கத் துரத்துகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடந்து செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்