திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் இருபுறமும் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் விசாலமாக இருந்த சாலையின் அளவு சுருங்கிப்போயுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே அதிகாரிகள் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.