மதுரை கீழமாசி வீதி தேர் நிற்கும் பகுதிக்கு அருகே மற்றும் விளக்குத்தூண் பகுதி சாலையோரங்களில் சிலர் இருசக்கர வாகனம் மற்றும் கார்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?