சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை சாலைகளிலும், தெருக்களிலும் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. மேலும அந்த வழியாக நடந்து செல்வோரையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் நாய்க்கடிக்கு ஆளாகும் நிலையும், விபத்தில் சிக்கும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.