திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தின் அருகில் உள்ள சாக்கடை கால்வாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. ஆனால் அதில் இருந்து அள்ளப்பட்ட கழிவுகள் கால்வாய் அருகிலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டும்.