செட்டியார்பட்டி பேரூராட்சி வார்டு எண் 1 வனமூர்த்தி லிங்கம் பிள்ளை தெரு அருகே நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் தண்ணீர் வால்வு திறந்து விடப்படும் தொட்டி நீண்ட நாட்களாக மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இதில் சிக்கி சில வாகன ஓட்டிகள் விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?