மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதி சுந்தரராஜபுரம் காய்கறி சந்தை அருகே இரவு நேரங்களில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் சில கால்நடைகள் சாலையில் ஆங்காங்கே வரிசையாக படுத்து கொள்வதால் அவ்வழியே செல்லும் பாதசாரிகள், மற்றும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சில வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த முன்வருவார்களா?