சிறுபாக்கத்தல் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை அப்பகுதியில் திறந்திருக்கும் கடைகள், வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடிச்செல்கின்றன. மேலும் விரட்ட வரும் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள், பொதுமக்கள் விட்டைவிட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.