நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா திருவம்பலாபுரம் பஞ்சாயத்து உலகரட்சகர்புரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக செல்வதாக ரவிச்சந்திரன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.