நெல்லை மாநகராட்சி அலுவலகம் அருகில் சாப்டர் பள்ளி உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.