நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, சோமநாதபேரி, கலுங்குவிளை வழியாக சாத்தான்குளம் செல்லும் சாலையில் ராமநேரி- மேல செட்டிகுளம் இடையே சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.