விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே பயணிக்கும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு, செல்லும் இடங்களுக்கு நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.