நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-06-14 12:40 GMT

நட்டாலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியின் அருகில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. ஆனால் அந்த நிறுத்தத்தில் பணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் வெயில் மற்றும் மழை நேரங்களில் பள்ளி மாணவி-மாணவிகள், முதியோர்கள் பெரும் சிரமத்துடன் பஸ்சிற்காக காத்து நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகள் நலன்கருதி பள்ளியின் அருகில் நிழற்குடை அமைப்பார்களா?.

-காமராஜ், நட்டாலம்.

மேலும் செய்திகள்