கடலூர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த கழிப்பறை கட்டிடமானது சேதமடைந்ததால் அந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிய கழிப்பறை கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.