டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?

Update: 2026-06-07 17:20 GMT
குள்ளஞ்சாவடி- ஆலப்பாக்கம் பிரதான சாலையில் இரண்டு டாஸ்மாக் கடை அருகருகே அமைந்துள்ளது. இங்கு மது வாங்கி குடிக்கும் மதுப்பிரியர்கள் போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்பவர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மதுபாட்டில்களை சாலையிலேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்