நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி யூனியன் சங்கன்திரடு பஞ்சாயத்து வடக்கு சங்கன்திரடு கிராமத்தில் சாலை பணி தொடங்கப்பட்டு 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதாக ராம்குட்டி என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.