திருச்சி ஜங்ஷனில் இருந்து சத்திரம் செல்லும் பஸ்கள் ஜங்ஷன் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லும். தினமும் ஏராளமான பயணிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில நாட்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனால் தற்போது பயணிகள் கடும் வெயிலில் பஸ்சுக்காக காத்துநிற்கின்றனர். எனவே பயணிகள் நலன்கருதி இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.