திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளால் குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடையாகும் நெல்லை கொள்முதல் செய்யும் பொருட்டு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும். மேலும், உப்பிலியபுரம், வெங்கடாசலபுரம், மாராடி, ப.மேட்டூர், வடக்கிப்பட்டி, சிறுநாவலூர், ஆலத்துடையான்பட்டி, எரகுடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகளால் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.