பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்

Update: 2026-06-07 19:31 GMT

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அருகே வேப்பங்குப்பம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், புதிய குடும்ப அட்டை, தகுதி மாற்றம் செய்தல் போன்றவை, பட்டா, சிட்டா கேட்டு விண்ணப்பங்கள் கொடுப்பது போன்ற வசதிகள் வேண்டி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே கிடப்பதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தை அதிகாரிகள் தினமும் திறக்க வேண்டும்.

-சுந்தரமூர்த்தி, ஒடுகத்தூர்.

மேலும் செய்திகள்