வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-06-07 17:56 GMT

திருச்சி அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சு உள்ளிட்டவையும் வந்து செல்கின்றன. இந்நிலையில் அரசு மருத்துவமனையின் நுழைவு வாயிலில் திரும்பும் இடத்தில் சாலையை ஆக்கிரமித்தவாறு கடைகள் உள்ளது. இதனால் ஆம்புலன்சு உள்ளிட்ட வாகனங்கள் திரும்பும் போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்