சேலம் அங்கம்மாள் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாலையில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.