தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியம், செட்ரப்பட்டி ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. செட்ரப்பட்டி ஊராட்சியை மருத்துவ பணிகளுக்காக கூத்தாடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர் சிகிச்சைக்காக சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூத்தாடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் போக்குவரத்து வசதியும் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகமும், மருத்துவ துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.