தெருநாய்கள் தொல்லை

Update: 2026-06-07 11:28 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மலைக்கோவிலூர், பாரதி நகர், தகரக் கொட்டகை ஆகிய பகுதிகளில் சில நாட்களாக தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் நிலையில், இவை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் துரத்தி கடிக்க பாய்கின்றன. மேலும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து ஆடுகளையும் கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக நாகம்பள்ளி ஊராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்