கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தடாகூர் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் இருந்து அரவக்குறிச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தடா கோவில் பஸ் நிறுத்தத்தில் நின்று தான் பஸ் ஏறி செல்ல வேண்டும். இந்நிலையில், தற்போது தடா கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருவதால், இப்பகுதியில் உள்ள மரங்கள் எல்லாம் அகற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் வெயிலில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே இப்பகுதியில் தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.