கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு சாய்ந்த பழமைவாய்ந்த மரத்தின் அடிப்பகுதி இன்னும் அகற்றப்படவில்லை. அங்கு புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே புதர்மண்டிய பள்ளிக்கூட வளாகத்தை சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.