அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர்

Update: 2026-05-31 14:16 GMT

சேலம் சிவதாபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. இதனால் பாதுகாப்பற்ற சூழல் அங்கு நிலவி வருகிறது. மேலும் சுற்றுச்சுவர் இல்லாததால் அங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்