பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 7-வது வார்டு ஏரிக்கரை ரோட்டில், 2018-19-ம் ஆண்டு ரூ.11.20 லட்சம் மதிப்பில் பொது கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கழிவறையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் கழிவறை பராமரிக்கப்படாததால் மக்கள் துர்நாற்றத்திலும் கழிவறையை பயன்படுத்தி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ?