ஊத்தங்கரை காமராஜ் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது இது பராமரிப்பின்றி திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுநாள்வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சுகாதார கழிப்பிட கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.