பாழடைந்த அங்கன்வாடி மையம்

Update: 2026-05-31 12:38 GMT

திருவள்ளூர் மாவட்டம் மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 3-வது பிரதான சாலையில் உள்ள 97-வது தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது. ஆனால் இந்த அங்கன்வாடி மையம் பல மாதங்களாக பயன்படாமல் மிகவும் பாழடைந்து உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பயன்படுத்தி வந்த அந்த அங்கன்வாடி மையம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தரவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்