வேர்கிளம்பி சந்திப்பு பகுதியில் இருந்து திருவட்டார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் வேர்கிளம்பி சந்திப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இனால் பயணிகள் அருகில் உள்ள கடைகளின் முன்பு ஒதுங்கி நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பயணிகள் பஸ்சிற்காக காத்திருக்கும் இடத்தில் அவர்களுக்கு இடையூறாக சிலர் கட்டுமான பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி அங்கு நிழற்குடை அமைக்கவும், இடையூறாக கிடக்கும் கட்டுமான பொருட்களை அகற்றிடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருள்ராஜ், வேளர்கிளம்பி.