கோழிகளை வேட்டையாடும் தெருநாய்கள்

Update: 2026-05-17 11:37 GMT

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதி முனியப்பன் கோவில் தெரு, என்.எஸ் கேநகர், வாங்கப்பாளையம், தங்க நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இவை சாலையில் செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை துரத்திச் செல்வது வடிக்கையாகிவிட்டது. இரவு நேரங்களில் வீட்டில் வளர்க்கும் கோழிகளை கூண்டில் அடைத்து வைத்தாலும், கூட்டமாக வந்து கோழிகளை பிடித்துக்கொண்டு செல்கின்றன. இதனால் கோழி வளர்ப்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்