கரூர் லைட்ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, ஜவகர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.