நோய் பரவும் அபாயம்

Update: 2026-05-10 14:26 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பஸ் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இதன் அருகே சந்தை வளாகமும் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் கழிப்பறைகள் பராமரிப்பின்றி மிகவும் பாழடைந்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் பஸ் நிலைய கழிப்பறைகளை பராமரிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்