பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2026-05-10 11:55 GMT

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நுழைவு வாயில் அருகே சுகாதார வளாகம் அமைந்துள்ளது. இந்த சுகாதார வளாகம் கடந்த சில நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை முறையாக பராமரித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-------------

மேலும் செய்திகள்