திருப்பூர் மண்ணைரை பகுதிகளில் காம்பவுண்டன் கூடிய வாடகை வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் குடியிருப்பவர்களின் மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் திருடப்படுகிறது. பெட்ரோலை திருட பிரத்யேக டியூப் வைத்துள்ளனர். அதிகாலை நேரம் அந்த டியூப்பை ெ்பட்ரோல் டேங்கில் சொருகி பெட்ரோலை திருடி செல்கிறார்கள். இந்த திருட்டு கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. எனவே வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் மட்டுமே பெட்ரோல் திருட்டை கண்டு பிடிக்க முடியும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.