தூர்வாரப்படாத கால்வாய்

Update: 2026-05-10 11:12 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட முருங்கப்பேட்டை பகுதியில் உள்ள கால்வாய் நீண்ட காலமாக தூர்வாரப்டாமல் உள்ளது. இதனால் முதலை உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 15 அடி நீளமுள்ள முதலை குடியிருப்பு பகுதிக்குள் புதுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடனேயே குடியிருந்து வருகின்றனர். எனவே தூர்வாரப்படாத கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்