நாகர்கோவில் ஈத்தாமொழி சந்திப்பில் இருந்து பீச்ரோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பீச்ரோடு பகுதியில் ஒரு கிறிஸ்வத ஆலயம் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தில் முன்பு பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. பின்னர், மாநகராட்சி சார்பில் சாலையோர நடைபாதை அமைப்பதற்காக நிழற்குடை அகற்றப்பட்டது. நடைபாதை அமைக்கும் பணியும் முழுமையாக முடியவில்லை. தற்போது கோடை காலம் என்றதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த நிறுத்தத்தில் கடும் வெயிலில் பயணிகள், முதியோர்கள் பெரும் சிரமத்துடன் பஸ்சிற்காக காத்து நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தில் பயணிகள் நலன்கருதி நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெங்கநாதன், பீச்ரோடு.