நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா விஜயாபதி- கொத்தங்குளம் ரோட்டில் உள்ள தரைமட்ட ஓடைபாலம் மிகவும் குறுகலாகவும், தாழ்வாகவும் உள்ளது. இதனால் அந்த வழியாக இரவில் வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. குறுகலான சாலையில் வேன்கள் கூட செல்ல முடிவதில்லை. மழைக்காலத்திலும் பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அங்கு உயர்மட்ட தாம்போதி பாலம் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.