நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தெருக்களில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் சிறுவர், சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் வாகனங்களில் செல்பவர்கள் தெருநாய்கள் துரத்துகின்றன. அப்போது அவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். சிலர் தெருநாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.