ஊர் பெயர் பலகை அவசியம்

Update: 2026-05-03 14:16 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டையில் இருந்து தலைவன்கோட்டை வழியாக செல்லும் சாலையில் ஊர் பெயர் பலகை இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வெள்ளானைக்கோட்டைக்கு வருகிறவர்கள் வழிதெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே ஊர் எல்லைகளில் பெயர் பலகைகள் வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்