போக்குவரத்துக்கு இடையூரான அடிபம்பு

Update: 2026-05-03 14:16 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி- கடலையூர் ரோடு தங்கப்பாநகர் தெருவுக்கு எதிர்புறம் சாலையோரமாக அடிபம்பு பழுதடைந்த நிலையில் இருந்தது. தற்போது அடிபம்பின் மேல்பகுதி இல்லாமல், அடிப்பகுதி மட்டும் தரைமட்டத்தில் தனியாக உள்ளது. இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிபம்பில் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அடிபம்பை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி.

மேலும் செய்திகள்