போக்குவரத்து நெரிசல்

Update: 2026-05-03 14:07 GMT

மதுரை வார்டு எண் 47 தெற்கு வாசல் சின்ன கடை வீதி பகுதி சாலைகளில் இருபுறங்களிலும் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதால் அச்சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி சாலைகளின் ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றவும் மேலும் வாகனங்களை நிறுத்துவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்