மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் பகுதியில் சாலைகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்களை துரத்தி சென்று கடிக்கின்றது. மேலும் வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்தி செல்கின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் இவ்வாறு பொதுமக்களுக்கு தொடர் தொல்லையை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.