பர்கூர் பேரூராட்சியில் மைய பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் சுப நிகழ்ச்சிகள் நடத்த பார்க்கிங் வசதியுடன் கூடிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. பின்னர் இது முறையான பராமரிப்பு இல்லாததால் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டது. வாடகைக்கு எடுத்தவர்களும் முறையாக அதனை பயன்படுத்தவில்லை. இந்த சமுதாயக்கூடம் தற்போது மிகவும் சேதமடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சமுதாயக்கூடத்தை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?