நாகர்கோவிலில் இருந்து குளச்சல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான கனரக லாரிகள் அதிகளவில் அதிவேகத்துடன் சென்று வருகின்றன. இதனால் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து ஆங்கேங்கே சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், லாரிகள் இரவு-பகல் என ஹாரன் மூலம் அதிக சத்தத்துடனான ஒலியை எழுப்பியபடி செல்கின்றன. இதனால், சாலையோர குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, லாரிகள் அதிக சத்தம் கொண்ட ஹாரன் பொருத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.