தூர்வாரப்படுமா?

Update: 2026-05-03 12:58 GMT

பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட சிவபுரம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் தெருவோரங்களில் மழைநீர் வடிகயால் ஓடை முறையாக தூர்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் மழை நேரங்களில் வடிகால் ஓடையில் தண்ணீர் வடிந்தோட வழியின்றி சாலையில் பாய்கிறது. இதன்காரணமாக சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மழைநீர் வடிகால் ஓடையை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோலப்பன், பூதப்பாண்டி.

மேலும் செய்திகள்