சாமிதோப்பு அருகே பூலான்குளம் உள்ளது. இந்த குளத்தில் கரையோரமாக குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் சாமித்தோப்பு பஞ்சாயத்தில் உள்ள ஏராளமான மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன் இந்த கிணற்றின் சுவர் இடிந்து உள்ளே விழுந்துள்ளது. தற்போது கிணறானது அபாய நிலையில் காணப்படுகிறது. மேலும், எஞ்சியுள்ள சுவற்றின் பகுதிகளும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீரும் கிடைப்பதில்லை. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த கிணற்றின் சுவரை சீரமைப்பதுடன், பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.