சென்னை அம்பத்தூர் ரெயில் நிலையம் எப்போதும் பயணிகள் வந்து செல்லும் பரபரப்பான ரெயில் நிலையம். இங்கு சமீப காலமாக மாடுகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. மேலும் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை முட்டுவது போல் செல்வதால் பயணிகள் அச்சத்துடனே செல்கின்றனர். ஆங்காங்கே மாடுகள் படுத்துக்கொள்வதால், ரெயில் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில் நிலையங்களில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.