நோய் பரவும் அபாயம்

Update: 2026-08-16 17:05 GMT

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஊராட்சியில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறுகிறது. இங்கு நீண்ட நாட்களாக முறையான பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் தேங்கியும், சுகாதாரமற்ற நிலையிலும் காணப்படுகிறது. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தை வளாகத்தில் செடி, கொடிகள் மற்றும் புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்