சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் மோட்டார்சைக்கிளை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள் சாலையை கடக்க அச்சமடைகின்றனர். மேலும் பிற வாகன ஓட்டிகளும் அச்சத்தில் நிலைத்தடுமாறி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே, அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?